sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

/

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை

பராமரிப்பு பணிக்கு பின் மீண்டும் சோளிங்கரில் துவங்கியது ரோப்கார் சேவை


ADDED : ஜூன் 08, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மார்ச் 8 ல், 20 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் பங்களிப்புடன் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ரோப்கார் சேவை வாயிலாக, தினசரி ஆயிரம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த ரோப்கார் சேவை, 5 மற்றும் 6ம் தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் வழக்கம் போல் இயங்கியது. காலை 8:00 மணி முதல் ரோப்கார் வளாகத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் ரோப்காரில் அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us