ADDED : ஜூன் 06, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
கொளத்துார்: வில்லிவாக்கம் வடக்கு ஜகன்னாதன் நகரைச் சேர்ந்த ரமேஷ், 57. பேருந்து ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டின் முன், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ரவுடி அருண்பிரபு, 36, என்பவரின் மகன்கள் இருவர், அந்த சிறுவர்களிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளனர். இதை, ரமேஷ் கண்டித்துள்ளார்.
இதையடுத்து, மகன்கள் தங்கள் தந்தையான ரவுடி அருண்பிரபுவிடம் கூறியுள்ளனர். அருண்பிரபு, கூட்டாளிகளுடன் சென்று, ரமேஷ், அவரது மனைவி சுஜாதாவை தாக்கினர். காயமடைந்த ரமேஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து அருண்பிரபுவை கைது செய்தனர்.
