/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீசை மிரட்டிய ரவுடிக்கு 179 நாள் சிறை
/
போலீசை மிரட்டிய ரவுடிக்கு 179 நாள் சிறை
ADDED : மார் 02, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய பெண் காவலர் இந்துமதி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது, விசாரணைக்கு வந்த 'தர்கா' மோகன், 63, அவரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்த புகாரின்படி, மோகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மோகனுக்கு 179 நாள் சிறை தண்டனை மற்றும் 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.