/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டீக்கடையில் குட்கா ரூ.25,000 அபராதம்
/
டீக்கடையில் குட்கா ரூ.25,000 அபராதம்
ADDED : ஆக 14, 2024 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி, தாயுமான் செட்டி தெருவில் உள்ள டீக்கடை ஒன்றில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று, பொன்னேரி காவல் நிலைய எஸ்.ஐ., சாமுவேல் தலைமையிலான போலீசார் ,அங்கு சோதனை மேற்கொண்டனர். டீக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 54 பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
விற்பனையில் ஈடுபட்ட பொன்னேரி, திருவாயற்பாடியைச் சேர்ந்த சங்கர், 54, என்பவரை கைது செய்தனர். உணவு பாதுகாப்புத் துறையினரும் டீக்கடையில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.