/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.50 லட்சம் நில மோசடி பெண் கைது
/
ரூ.50 லட்சம் நில மோசடி பெண் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:அம்பத்துாரைச் சேர்ந்தவர் தெய்வஜோதி. இவர், ஆவடி போலீஸ் கமிஷனரகம், மத்திய குற்றப்பிரிவில், புகார் செய்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
அம்பத்துார் அடுத்த புத்தகரம் கிராமத்தில், எனக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,580 சதுர அடி காலி மனை உள்ளது. அந்த இடம், நான் கையெழுத்து போட்டு விற்றது போன்று, 'போலி' கையெழுத்திட்டு அபகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
விசாரித்த போலீசார், மணலி, சின்னசேக்காடு, அண்ணா தெருவில் வசிக்கும் கீதா, 55, என்பவரை, கைது செய்தனர்.