/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலகுருநாதீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்
/
பாலகுருநாதீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்
ADDED : மே 23, 2024 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த ராசபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது, பாலகுருநாதீஸ்வரர் கோவில். இக்கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகர், விநாயகர் என பஞ்சமூர்த்திகள் ஒரே சிலையாக அமைந்துள்ளது சிறப்பு.
இந்த தல விருட்சத்தில், சித்தர்கள் அருள்பாலிப்பதாக கிராமத்தினர் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீபோற்சவம், பிரதோஷம், நித்திய வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வைகாசி பவுர்ணமியை ஒட்டி, நேற்று காலை பாலகுருநாதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. அதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை வள்ளலார் மடத்தில் நேற்று பவுர்ணமியை ஒட்டி, ஜோதி தரிசனம் நடந்தது.