/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வள்ளிமலை கோவில் வளாகத்தில் சுகாதார கேடு
/
வள்ளிமலை கோவில் வளாகத்தில் சுகாதார கேடு
ADDED : ஏப் 28, 2024 02:09 AM

வள்ளிமலை:பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை கோவில். மலைக்கோவில் மற்றும் மலையடிவாரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார். மலை மீது அமைந்துள்ள குகை கோவில், ஆசிரமம், ஜெயின் மடங்கள் சிறப்பு மிக்கவை.
ராணிபேட்டை, வேலுார், திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
முருகப்பெருமான், வள்ளியை கவர்ந்த தலம் என்பதால், இங்கு ஏராளமான திருமணங்கள் நடத்தப்படுகின்றன. கோவில் எதிரே, 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவில், சரவணபொய்கை, வள்ளி சன்னிதி உள்ளிட்ட பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கோவில் முன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளின் கழிவு கிடக்கிறது. இந்த வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் சுத்தம் குறித்து, சுற்றுச்சூழல் திட்டம் சார்பில் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகையும் மறுசீரமைப்பு இன்றி சீரழிந்து கிடக்கிறது. கோவில் வளாகத்தை சுத்தமாக பராமரிக்கவும், விழிப்புணர்வு பதாகையை புதுப்பிக்கவும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

