/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டிய கார் பறிமுதல்: ஆர்.டி.ஓ., அதிரடி
/
போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டிய கார் பறிமுதல்: ஆர்.டி.ஓ., அதிரடி
போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டிய கார் பறிமுதல்: ஆர்.டி.ஓ., அதிரடி
போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டிய கார் பறிமுதல்: ஆர்.டி.ஓ., அதிரடி
ADDED : மே 09, 2024 01:29 AM

திருத்தணி:ஆந்திரா - தமிழக எல்லைக்குள் போலி பெயர் பலகைகள் மற்றும் போலீஸ் என, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்கள் இயங்கி வருவதாக, சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து புகார் வந்தன.
இதையடுத்து, அவரது உத்தரவின்படி, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் நேற்று தமிழக- - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஆந்திர மாநிலம் சித்துார் அடுத்த நகரியில் இருந்து கார் ஒன்று போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியும், போலீஸ் சைரனை ஒலித்துக் கொண்டு திருத்தணி நோக்கி வந்தது.
சந்தேகமடைந்த மோட்டார் வாகன ஆய்வாளர், காரை மடக்கி ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது, தனிநபருக்கு சொந்தமான காரை போலீஸ் துறை வாகனம் எனவும், ஆட்களை ஏற்றிக் கொண்டு வாடகைக்கு சென்று வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து, காரை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும், 'தவறாக போலீஸ் வாகனம் என பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரித்தார்.