ADDED : ஆக 14, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில், திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு கணேஷ்பாபு, 54, என்பவரின் மளிகை கடையில் சோதனை நடத்தினர்.
இதில், 10 ஹான்ஸ், 19 கூல்லிப், 12 ஸ்வாகத் என, மொத்தம் 41 போதை பாக்குகளை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 1,500 ரூபாய்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், கணேஷ்பாபுவை கைது செய்தனர்.