/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்: இரண்டு பேர் கைது
/
ரூ.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்: இரண்டு பேர் கைது
ரூ.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்: இரண்டு பேர் கைது
ரூ.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்: இரண்டு பேர் கைது
ADDED : மே 30, 2024 12:43 AM

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம், திருத்தணி வழியாக சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.பி.,யின் தனிப்படை பிரிவு எஸ்.ஐ., குமார் தலைமையிலான போலீசார், நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் நிலையத்தில் பையுடன் சுற்றித்திருந்த நான்கு வாலிபர்களை சந்தேகத்தின்படி, தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றனர். இதில், இருவர் மட்டும் சிக்கினர். மற்ற இருவர் தப்பிச் சென்றனர்.
அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி உள்ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதன் தற்போதைய மதிப்பு 4.70 லட்சம் ரூபாய்.
விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த தயாளன், 23, மோனிஷ்குமார், 28, என தெரியவந்தது. மேலும், தப்பியோடிய இருவரும், திருவள்ளூரைச் சேர்ந்த தேவா, லலித் எனவும் தெரிய வந்தது.
இவர்கள், மும்பையில் குறைந்த விலைக்கு போதை மாத்திரைகள் வாங்கி, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து தயாளன், மோனிஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.