ADDED : மே 07, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணல் வாகனங்கள் மூலம் திருத்தணி நகருக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நகரி பகுதியில் இருந்து, அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கினர்.
லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். லாரியில், 4 யூனிட் மணல் இருந்தது. இதன் மதிப்பு, 40,000 ரூபாய்.
மேலும், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.