/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியுடன் சுற்றிய ஏழு பேர் கைது
/
கத்தியுடன் சுற்றிய ஏழு பேர் கைது
ADDED : ஆக 07, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஏரிக்கரை அருகே கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக வீடியோ இரு தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறுத்து வழக்கு பதிந்து திருவள்ளூர் நகர போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த சின்ன ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின், 22 மற்றும் 17 வயதுள்ள 4 பேர் , 14 வயதுள்ள இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏழு பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருவள்ளூர் போலீசார் அஸ்வின் என்பவரை திருவள்ளூர் கிளைச் சிறையிலும், ஆறு சிறுவர்களை சென்னை கெல்லீஸ் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.