/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுலா தலங்களில் கடைகள் மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு
/
சுற்றுலா தலங்களில் கடைகள் மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு
சுற்றுலா தலங்களில் கடைகள் மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு
சுற்றுலா தலங்களில் கடைகள் மகளிர் குழுவினருக்கு வாய்ப்பு
ADDED : ஆக 09, 2024 11:39 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தலங்களில், 'மதி' அங்காடி மையம் அமைக்க மகளிர் சுயக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மகளிர், குழுவினர் முக்கிய சுற்றுலா தலங்களில் 'மதி' அங்காடி அமைக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கம், வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், மீஞ்சூர் ஒன்றியம் 'லைட் ஹவுஸ்' குப்பம் ஊராட்சி ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களில் மதி அங்காடி அமைக்கலாம்.
சம்பந்தப்பட்ட சுற்றுலா தலங்களில், 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஊராட்சிகளில் இருந்து தகுதியான, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வங்கி இணைப்பு கடன் பெற்று பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக் குழு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சுயஉதவிக் குழு ஆகியோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களை, 'திட்ட இயக்குனர், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கலெக்டர் அலுவலக வளாகம், திருவள்ளூர்' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ, வரும் 28க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 044- - 2766 4528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.