/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் நகராட்சி பள்ளி எதிரே புதர் மண்டியுள்ள கழிப்பறை
/
சோளிங்கர் நகராட்சி பள்ளி எதிரே புதர் மண்டியுள்ள கழிப்பறை
சோளிங்கர் நகராட்சி பள்ளி எதிரே புதர் மண்டியுள்ள கழிப்பறை
சோளிங்கர் நகராட்சி பள்ளி எதிரே புதர் மண்டியுள்ள கழிப்பறை
ADDED : மே 16, 2024 12:38 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது கிழக்கு மோட்டூர் கிராமம். இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில், பரவத்துார் சாலையில் நகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 320 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் எதிரே, பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் இதை முறையாக பராமரிக்காததால், சீரழிந்து வருகிறது. கழிப்பறையை சுற்றிலும் புதர் மண்டியுள்ளது. பகுதிவாசிகள் இந்த கழிப்பறைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பகுதிவாசிகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட கழிப்பறை பயனின்றி கிடப்பதால், இதற்காக செலவிடப்பட்ட அரசு நிதி பயனின்றி வீணாகியுள்ளது. கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.