/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு: 320 பேர் தவிப்பு
/
சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு: 320 பேர் தவிப்பு
ADDED : மே 23, 2024 11:39 PM
சென்னை, சிங்கப்பூரில் இருந்து புறப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு தினமும் இரவு 10:00 மணிக்கு வந்து சேரும். இங்கிருந்து, இரவு 11:15 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.
நேற்று முன்தினம், சிங்கப்பூரில் கிளம்பிய அந்த விமானம், ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே, இரவு 9:55 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இரவு 11:15 மணிக்கு, சிங்கப்பூருக்கு புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர் செல்ல காத்திருந்த 320 பயணியர், ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என, அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, நேற்று அதிகாலையில் சரிசெய்யப்பட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், மூன்றரை மணி நேரம் தாமதமாக, சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த தாமதத்தால், 320 பயணியர் சென்னை விமான நிலையத்தில் அவதிப்பட்டனர்.