/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் நிறுவனத்திற்கு மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி சாய்ப்பு
/
தனியார் நிறுவனத்திற்கு மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி சாய்ப்பு
தனியார் நிறுவனத்திற்கு மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி சாய்ப்பு
தனியார் நிறுவனத்திற்கு மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி சாய்ப்பு
ADDED : மே 28, 2024 05:46 AM

பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களில் புங்கம், வேம்பு, புளியம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. புயல் காலங்களில் பழமையான மரங்கள் விழுந்த நிலையில், தற்போது அப்பகுதிகளில் புதிதாக மரங்களும் வளர்ந்து இருக்கின்றன.
இந்நிலையில், கல்மேடு பகுதியில் செயல்படும் தனியார் தார் பிளாண்ட் நிறுவனத்திற்கு புதியதாக மின்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் இருந்த, 50 மரங்கள் அடியோடு வெட்டி எடுக்கப்பட்டு உள்ளன.
மின்பாதை கொண்டு செல்வதற்கு, மாற்று வழித்தடம் உள்ள நிலையில், தேவையின்றி நன்கு வளர்ந்திருந்த மரங்களை வெட்டி எடுத்து, மின்பாதை அமைத்து உள்ளனர். இது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
தார் பிளாண்ட் செயல்படும்போது அதிலிருந்து வெளியேறும் புழுதி மற்றும் புகை விளைநிலங்களை பாழாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது மின்பாதைக்காக மரங்களை வெட்டி எடுத்து உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டு கொள்ளவில்லை.
நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களை வைத்து பராமரிப்பதில் தான் அலட்சியம் காட்டுகின்றனர் என நினைத்தால், இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் அக்கறை காட்டாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.