/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் சோழபுரீஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா
/
சோளிங்கர் சோழபுரீஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா
ADDED : மே 16, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அருள்பாலித்து வருகிறார் கனககுசாம்பாள் உடனுறை சோழபுரீஸ்வரர் சுவாமி.
பழமையான இந்த கோவிலில், ஆருத்ரா, பிரதோஷ வழிபாடு, பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 13ம் தேதி முதல் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. வரும் 26ம் தேதி வரை தினசரி பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருள உள்ளார்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை உற்சவர் பெருமான், பூத வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். மாலை 6:00 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் உலா வந்தார்.