ADDED : மார் 06, 2025 02:27 AM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி சரஸ்வதி, 57. இவரது மகன் முனுசாமி, 37. இவர், அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். முனுசாமி நேற்று முன்தினம், உறவினர்கள் அரிதாஸ், 50, அவரது மனைவி தேவி மற்றும் அஞ்சலி ஆகியோருடன், தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு, முனுசாமி மற்றும் உறவினர்கள் அரிதாஸ், தேவி, அஞ்சலி ஆகியோர் சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி மற்றும் உறவினர்கள், உருட்டு கட்டையால் சரஸ்வதியை சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த சரஸ்வதி மருமகள் ஜெயந்தியையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் முனுசாமியை கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.