/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தந்தையை வாகனம் ஏற்றி கொன்ற மகன்
/
தந்தையை வாகனம் ஏற்றி கொன்ற மகன்
ADDED : ஜூலை 12, 2024 01:58 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. இவருக்கு மூன்று மகள்களும், வெங்கடேசன், 28, என்ற மகனும் உள்ளனர்.
ராஜேந்திரன் வசிக்கும் வீடு மற்றும் அதையொட்டியுள்ள நிலத்தை, தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு மகன் வெங்கடேசன் கேட்டுள்ளார்.
இதற்கு 'மகள்களுக்கும் சேர்ந்து நான்கு பாகமாக தான் சொத்தை பிரித்து கொடுப்பேன்' என, ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால், ராஜேந்திரனுடன் வெங்கடேசன் சில தினங்களாக தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சாலையோரம் ராஜேந்திரன் நின்றிருந்தார். அப்போது வெங்கேடசன், தனது, மகிந்திரா குரூசியோ மினி வேனை ஓட்டி சென்று, ராஜேந்திரன் மீது மோதினார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வேனை அங்கேயே விட்டு, வெங்கடேசன் தப்பியோடினார்.
தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான வெங்கேடசனை போலீசார் தேடி வருகின்றனர்.