ADDED : ஜூலை 01, 2024 05:48 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் நாளை 2ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்
கூட்டத்தில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தின் மூலம் ஒப்புதல் பெறுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும்.
காலை 11:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உரிய கெரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பகுதிவாசிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.