/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
/
வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:58 PM
மீஞ்சூர், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் வருகையால், அங்குள்ள வனப்பகுதியில் இருந்து, புள்ளிமான்கள் வெளியேறி வருகின்றன.
அவ்வப்போது இவை, அருகில் உள்ள கிராமங்களில் சுற்றித்திரியும்போது நாய்கள் கடித்தும், சாலைகளை கடந்து செல்லும்போதும், வாகனங்களில் சிக்கியும் உயிரிழக்கின்றன.
நேற்று காலை, 6:00 மணிக்கு, காட்டுபள்ளி காமராஜர் துறைமுகம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.
தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர் அங்கு சென்று மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
காட்டுபள்ளி பகுதியில் உள்ள புள்ளிமான்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.