ADDED : ஜூன் 24, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
சென்னை: மாநில சதுரங்க போட்டியில் பங்கேற்க, கிரசன்ட் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
வண்டலுாரில் உள்ள பி.எஸ்., அப்துர் ரகுமான் கிரசன்ட் பல்கலை சார்பில், மாநில அளவிலான மூன்றாவது சதுரங்க போட்டி, அதன் வளாகத்தில் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.
இதில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட இருபாலர் பிரிவிலும், ‘சுவிஸ்’ அடிப்படையில், ‘பிடே’ விதிப்படி போட்டிகள் நடக்கவுள்ளன.
முதல் 25 இடங்களை பிடிக்கும் இருபாலருக்கும், கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இளம் வீரர் – வீராங்கனையருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 72001 01544 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
