/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
/
எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு
ADDED : ஆக 22, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, திருத்தணி அரக்கோணம் வழியாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் மாலை, திருத்தணி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத சிலர், ரயில் மீது கற்களை வீசினர். இதில், ஏ.சி., பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.
பயணியர் காயமின்றி தப்பினர்.
ரயில்வே போலீசார் விசாரணையில், திருத்தணி, திரவுபதி அம்மன் கோவில் அருகே, பள்ளி சீருடையில் இருந்த மாணவர்கள் சிலர், ரயில் மீது கற்களை வீசியது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.