/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
/
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : மார் 11, 2025 12:12 AM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுரங்கப்பேட்டை ஊராட்சி தொடக்க பள்ளியில், நேற்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், 2025 - -26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:
ஐந்து வயது பூர்த்தியடைந்தவுடன், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பது தலையாய கடமை. தற்போது, அரசு பள்ளிகளில் தரமான கல்வி தர வேண்டும் என்ற முனைப்புடன் கல்வி குறியீடுக்கான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், எட்டு பள்ளிகளில் 34 மாணவர்கள் சேர்க்கை, முதல்கட்டமாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 809, பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 457 என, மொத்தம் 1,266க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், பள்ளி தலைமையாசிரியர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.