/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் ரயில் நிலையத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு
/
புட்லுார் ரயில் நிலையத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு
புட்லுார் ரயில் நிலையத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு
புட்லுார் ரயில் நிலையத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு
ADDED : மே 03, 2024 11:59 PM

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்துள்ளது புட்லூர் ரயில் நிலையம்.
கடந்த 2015ம் ஆண்டு காக்களூர் - புட்லுாரை இணைக்கும் வகையில் 620 மீட்டர் நீளம் 30 மீட்டர் அகலத்தில் ரூ. 18 கோடி மதிப்பில் துவங்கிய மேம்பால பணி கடந்தாண்டு நிறைவடைந்தது.
இதனால் ரயில் நிலையம் அருகில் இருந்த கடவுப்பாதை முழுதுமாக அகற்றப்பட்டு மூடப்பட்டது.
தொடர்ந்து உயிர் சேதங்களை தவிர்க்க ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக மக்கள் கடந்து செல்ல ஏதுவாக புதிய மேம்பாலம் பகுதியில் பொதுமக்கள் செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டது.
ஆனால் சிலர் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தாமல் அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்வதால் அடிக்கடி உயிர் பலி ஏற்பட்டு வந்தது.
இதை தடுக்கும் வகையில் புட்லூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கேட் அகற்றப்பட்ட நிலையில் முழுதுமாக கற்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு ரயில் பயணிகள் பாதுகாப்பாகச் செல்ல ரயில்வே துறையினர் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திடீரென சில நபர்களால் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் இது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக ரயில்வே மற்றும் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று புட்லூர் ரயில் நிலையத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் என 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.