நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மேக மூட்டம் காணப்பட்டது. காலை, 10:30 மணிக்கு மேக கூட்டங்கள் சூழ்ந்து, மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. தொடர்ந்து துாறலுடன் மழை பெய்ய துவங்கி, பலமாக பெய்தது.
மாலை, 3:00 மணிக்கு மேல் வெயில் பெரிய அளவில் தெரியவில்லை. வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

