/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2024 09:42 PM
திருவள்ளூர்:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைத்து மேம்படுத்தி எத்தனால் உற்பத்தி மற்றும் இணை மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில பொருளாளர் சிவபெருமாள் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் பாபு முன்னிலை வகித்தார்.
பின் விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மேம்படுத்த வேண்டும். எத்தனால் மற்றும் இணை மின் உற்பத்தி தொடங்குவதற்கு, 190 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சர்க்கரை விலையில் கோட்ட முறையில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தல்,தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதில், 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.