தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கடன் தொல்லையால் கடைக்குள் தற்கொலை

கடன் தொல்லையால் கடைக்குள் தற்கொலை

கடன் தொல்லையால் கடைக்குள் தற்கொலை


ADDED : ஜூலை 25, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லையால் பெட்டி கடை உரிமையாளர் கடைக்குள்ளேயே தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி, வள்ளியம்மை நகரில் வசித்தவர் அசோக்குமார், 55. பழைய தபால் தெருவில் பெட்டி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது மகன் தேடி சென்றார்.

அப்போது, கடைக்குள் துாக்கில் தொங்கியபடி அசோக்குமார் இறந்து கிடந்தார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க வேண்டும் என இருந்தது.

கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us