/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடைகால நீச்சல் பயிற்சி சிறுவர் - சிறுமியர் ஆர்வம்
/
கோடைகால நீச்சல் பயிற்சி சிறுவர் - சிறுமியர் ஆர்வம்
கோடைகால நீச்சல் பயிற்சி சிறுவர் - சிறுமியர் ஆர்வம்
கோடைகால நீச்சல் பயிற்சி சிறுவர் - சிறுமியர் ஆர்வம்
ADDED : மே 30, 2024 01:25 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஏப்., மாதத்தில் இருந்து கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தி வருவதால், வெப்பம் மிக அதிகரித்து, பகலில் வெப்பக் காற்று வீசி வருகிறது.
வீட்டிற்குள் அடைந்து கிடைந்தாலும், வெப்பம் அனலாக இருப்பதால், தற்போது சிறுவர்களும், இளைஞர்களும் நீர்நிலைகளுக்கு சென்று, வெப்பக் காற்றை தணிக்க, உல்லாச குளியல் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், தற்போது கோடை கால நீச்சல் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில், இளைஞர்கள், சிறுவர் - சிறுமியர் பங்கேற்று, நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, நீச்சல் குளத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.