/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை குடிமகன்கள் பாய்ச்சலால் பீதி
/
நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை குடிமகன்கள் பாய்ச்சலால் பீதி
நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை குடிமகன்கள் பாய்ச்சலால் பீதி
நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை குடிமகன்கள் பாய்ச்சலால் பீதி
ADDED : ஜூலை 24, 2024 01:18 AM
ஆர்.கே.பேட்டை:சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து மேற்கில் திரும்பு குறுக்கு தெருவில் ஆர்.கே.பேட்டை, விளக்கணாம்பூடி மேடு அருகே, டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், சாலையை திடீரென கடக்கின்றனர்.
இதனால், இந்த பகுதியில் ஏராளமான விபத்துகள் நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மதுக்கடை உள்ளதும், கடைக்கு செல்பவர்கள் சாலையை கடக்கக்கூடும் என்பதை வெளியூர் வாகன ஓட்டிகளால் யூகிக்க முடிவது இல்லை.
இதனால், வேகத்தை குறைக்காமல் இந்த கூட்டு சாலையை கடப்பவர்களால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர்.
மேலும், டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வரும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. விபத்து மற்றும் வாகனநெரிசலை கட்டுப்படுத்த இந்த பகுதியில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.