/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் மேற்பார்வையாளர் தற்கொலை
/
டாஸ்மாக் மேற்பார்வையாளர் தற்கொலை
ADDED : செப் 05, 2024 08:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ராஜிவ்காந்தி நகர் ஆதிசங்கர் அவின்யூவில் வசித்து வந்தவர் அருள்குமார், 44. இவர் சென்னை வானகரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில், மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அருள்குமார், கடையில் இருக்கும் பணத்தை எண்ணும் போது பணம் குறைந்திருந்தது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அருள்குமார் மின்விசிறியில் துாக்கிட்டுக் கொண்டார். அருகே வசித்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் , ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.