/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்
/
கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : பிப் 22, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:மத்திய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் 2,152 கோடி ரூபாயை விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு வாரம் கருப்புப்பட்டை அணிந்து பணி செய்ய முடிவெடுத்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் பணியாளர்கள் நேற்று மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். தொடர்ந்து ஒரு வாரம் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யவுள்ளனர்.

