sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி

/

32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி

32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி

32 மனைப்பிரிவுகளுக்கு தொழில்நுட்ப அனுமதி


ADDED : ஏப் 24, 2024 12:18 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:சென்னை பெருநகரில், ஜன., பிப்., மார்ச் மாதங்களில், 32 அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதற்காக தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017 ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கால அவகாசம், 2019ல் முடிந்தது.

இந்நிலையில், வரன்முறைக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒருமுறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசமும் முடிந்த நிலையில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர் பகுதியில் அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகளுக்கு சி.எம்.டி.ஏ., தொழில்நுட்ப அனுமதி வழங்கும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வரைபடங்களை ஆராய்ந்து வரன்முறை உத்தரவு வழங்கும்.

இந்த வகையில், ஜன., பிப்., மார்ச் ஆகிய மூன்று மாதங்களில், 32 கோப்புகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு, 12 மாதங்களில், 126 கோப்புகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது மூன்று மாதங்களில், 32 கோப்புகளுக்கு ஒப்புதல் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை பெருநகரில், 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்ட மனைப்பிரிவுகள் எண்ணிக்கை விபரம்:

ஆண்டு எண்ணிக்கை 2020 363 2021 5352022 290 2023 126 2024 32








      Dinamalar
      Follow us