/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூன் 01, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகள் சுரேகா, 29. இவருக்கும் கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 29 என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
சுரேகாவுக்கும் அவரது மாமியார் பச்சையம்மன் என்பவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேகா வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, சுரேகாவின் தாய் முனியம்மாள் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.