ADDED : ஏப் 17, 2024 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகையைச் சேர்ந்தவர் வம்சி, 19. இவர், திருப்பதி பகுதியில் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வம்சி தன் கிராமத்தில் உள்ள 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து வம்சியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

