/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டி
/
திருவள்ளூரில் டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : ஆக 26, 2024 11:15 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் அமுதா மெட்ரிகுலேஷன் பள்ளியில், திருவள்ளூர் மாவட்ட டென்னிகாயிட் சாம்பியன்ஷிப் 2024 - 25ம் ஆண்டிற்கான போட்டி கடந்த 24ம் தேதி நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆண்கள், பெண்கள் என 105 பேர் பங்கேற்றனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் இரட்டையர் பிரிவில் 14 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்டோர், 19 வயதுக்கு மேற்பட்டோர் என, மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.
அமுதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவில், முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு கல்விக் குழு உறுப்பினர் ஆர்.கார்த்திக் காமேஷ் பரிசு வழங்கி பாராட்டினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு டென்னிகாயிட் சங்க செயலர் டி.சங்கர், இணை செயலர், டி.முரளி, பொருளாளர் அனந்த கிருஷ்ணன் உட்பட பலர் பாராட்டினர்.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களை பெரும் வீரர்கள் வரும் 30, 31 மற்றும் 1ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர் என, திருவள்ளூர் மாவட்ட டென்னிகாயிட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.