/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணம் கேட்டு தராத ஆத்திரம் மது பிரியருக்கு பாட்டில் அடி
/
பணம் கேட்டு தராத ஆத்திரம் மது பிரியருக்கு பாட்டில் அடி
பணம் கேட்டு தராத ஆத்திரம் மது பிரியருக்கு பாட்டில் அடி
பணம் கேட்டு தராத ஆத்திரம் மது பிரியருக்கு பாட்டில் அடி
ADDED : ஜூலை 31, 2024 03:01 AM
திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த முடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 20; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு வந்தார்.
பின், மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, குடும்பத்தினர் அனைவரையும் மலைக்கோவிலில் இருக்கும்படி கூறிவிட்டு, திருத்தணி புறவழிச்சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில், ரஞ்சித் மது அருந்தினார்.அப்போது, அருகில் இருந்த மர்மநபர் ஒருவர், ரஞ்சித்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து மர்ம நபர் ரஞ்சித்தின் தலையில் அடித்து விட்டு தப்பிச் சென்றார்.
இதில் படுகாயமடைந்த ரஞ்சித் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.