sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

70 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்

/

70 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்

70 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்

70 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மணல் திருட்டு அதிகாரிகள் ஆய்வில் மாபியாக்களின் அட்டூழியம் அம்பலம்


ADDED : மே 12, 2024 09:39 PM

Google News

ADDED : மே 12, 2024 09:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த கொசப்பூரில், 100 ஏக்கர் பரப்பில் இயங்கிய, 'ஸ்பிக் ஆரோ மெடிக்' எனும் பாலி நுாலிழை உற்பத்தி செய்யும் நிறுவனம், பல ஆண்டாக மூடிக்கிடக்கிறது. அங்கிருந்த இயந்திரங்கள், மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு திருடு போயின. இந்த நிலையில், அந்த இடம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகும் பராமரிப்பற்றி நிலையால், அங்கு மண் மற்றும் மணல் திருட்டு நடந்தது. அதற்காக, அந்த இடத்தின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிக்கப்பட்டது.

தினமும், இரவில், 30 டாரஸ் லாரிகளில், மணல் திருட்டு நடந்தது. இது குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில், செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்கிருந்தோர், அதிகாரிகளை கண்டதும், லாரி, பொக்லைன் மற்றும் ஜே.சி.பி., வாகனங்களுடன் தப்பினர். அதிகாரிகள் ஆய்வு செய்த இடங்களில், 50 முதல் 70 அடி ஆழம் வரை, பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்தது. அதில், 30 அடி ஆழம் வரை சவுடு மண், அதன் கீழே தரமான மணலும் இருப்பது தெரியவந்தது.

உள்ளூர் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆசியுடன், மணல் மாபியாக்கள் 'கபளீகரம்' செய்து, 1 லோடு மணல், 80,000 ரூபாய் வரை விற்பதும் தெரியவந்தது. மணலுக்காக தோண்டப்பட்ட இடங்களில், இரண்டு 'டாரஸ்' லாரிகள், ஒன்றன் மீது ஒன்றை நிறுத்தும் அளவிற்கு, மெகா பள்ளங்கள் உருவாகி இருந்தன.

அதனால், பல மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டிருந்தன. மேலும், அங்குள்ள உயர்மின் அழுத்த கோபுரங்களும் சேதமடையும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.

மணல் திருட்டால், மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, போலீஸ், வருவாய், மின் வாரியம், சுற்றுச்சூழல், சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தினர் ஒருங்கிணைந்து, அரசு கட்டுப்பாட்டில் இடம் முழுக்க ஆய்வு செய்து, வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இங்கு நடக்கும் மணல் திருட்டால், டாரஸ் லாரிகளின் அழுத்தம் தாங்காமல், மாநகராட்சி சாலைகள் சேதமாகின்றன. மேலும், 50 அடிக்கு மேல் தோண்டப்படும் பள்ளத்தால், கடல் நீர் உட்புகுந்து உப்பு நீராகி விடும் ஆபத்து உள்ளது. அதனால், அடுத்த சில ஆண்டுகளில், வடசென்னை பகுதிகளில், ஒட்டுமொத்தமாக நல்ல குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும்.

மேலும், மணல் திருடர்களால் உயர்மின் அழுத்த கோபுரங்கள் சேமதடைந்தால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பெறப்படும் கூடுதல் மின்சாரம், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, உபரியாக கிடைக்கும் மின்சார வினியோகம் பாதிக்கப்படும்.

அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும், தொழில் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து, மணல் திருட்டை தடுத்து, வடசென்னையை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீர்வு கிடைக்கும்

வடசென்னையின் வளர்ச்சிக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்பில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பயன்பாட்டு வசதிகள், வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, வீட்டு வசதி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடு, பொது பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில், தமிழக அரசு திட்டங்கள் உருவாக்கி உள்ளது. இந்நிலையில், வடசென்னைக்குள் உள்ள கொசப்பூர் மண் திருட்டு நடந்த இடத்தை, தொழில்நுட்ப ரீதியாக முறையாக துார் வாரி, சுற்றுச்சூழலை காக்கும் 'புதிய நீர்நிலையாக' உருவாக்கும் திட்டத்தையும் அதில் சேர்க்கலாம். அப்படி செய்தால், புழல் ஏரி, மாதவரம் ரெட்டேரி ஆகியவற்றின் உபரிநீர் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் வாயிலாக கிடைக்கும் மழைநீரை, 1 டி.எம்.சி., அளவிற்கு சேகரிக்கலாம். அதனால், மணலி, மணலி புதுநகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தவிர்க்கலாம். ஆண்டுதோறும், பருவ மழைக்காலத்தில், மேற்கண்ட ஏரிகளில் இருந்து, 1 டி.எம்.சி,. தண்ணீர் வீணாக கடலுக்கு போவது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us