/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புயலில் சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பதில் வாரியம் அலட்சியம்
/
புயலில் சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பதில் வாரியம் அலட்சியம்
புயலில் சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பதில் வாரியம் அலட்சியம்
புயலில் சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பதில் வாரியம் அலட்சியம்
ADDED : மே 04, 2024 11:42 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட கிராமங்களுக்கு மின்சாரம் செல்வதற்கான மின்வழித்தடத்தில் உள்ள கம்பங்கள், ஒயர்கள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால், புதிய மின்வழித்தடத்திற்கான பணி கடந்த, 2022ல் துவங்கப்பட்டது.
இதற்காக மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து, பொன்னேரி - பழவேற்காடு சாலையின் ஓரங்களில் கம்பங்கள் பதிக்கப்பட்டன. அதன்பின், பணிகள் நடைபெறாமல் இருந்தன.
நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானதால், கடந்த ஆண்டு மின்கம்பங்களில் மின்ஒயர்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான பணிகள் முடிந்தும், புதிய மின்வழித்தடத்தில் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் வீசிய புயலின்போது, புதிய மின்வழித்தடத்திற்காக பதிக்கப்பட்ட மின்கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. அதிலிருந்த மின்ஒயர்களும், சாலையோரங்களில் விழுந்து கிடக்கின்றன.
புயல் வீசி, ஐந்து மாதங்கள் ஆன நிலையில், இதுவரை அந்த கம்பங்கள் மற்றும் ஒயர்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. மேலும், புதிய மின்வழித்தடத்திற்கான பணிகளும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
உடனடியாக மின்கம்பங்களை சீரமைத்து, புதிய மின்வழித்தடத்தில் மின்சாரம் கொண்டு செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் மற்றும் மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.