நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், மதனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன் நாகேஷ், 14. முனுசாமி, குடும்பத்துடன் ஊர் ஊராக சென்று சாலையோரம் வித்தை காட்டி பிழைத்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாக்குப்பம் கிராமத்தில், வித்தை காண்பித்து அன்று இரவு குடும்பத்துடன் அதே கிராமத்தில் துாங்கிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை பார்த்தபோது, சிறுவன் நாகேஷ் மாயமானார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், சிறுவனை தேடி வருகின்றனர்.