/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?..
/
வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி?..
ADDED : செப் 09, 2024 06:47 AM
சென்னை: கொளத்துார், திருமலை நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாரூக். நேற்று முன்தினம் இவரதுவீட்டிற்கு, திரிபுராமாநிலத்தைச் சேர்ந்தஉறவினர் சதாம் உசேன், 17,என்பவர் வந்துள்ளார்.
அவருக்கு திடீரென பல் வலி ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் வலி நிவாரண மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில், சதாம் உசேனின் உதடு மற்றும் கண் வீங்கியதாக கூறப் படுகிறது.
உமர் பரூக், அவரை கொளத்துார், கடப்பா சாலையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த சதாம் உசேன், திடீரென வலிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ராஜமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டுவிசாரிக்கின்றனர்.