ADDED : செப் 09, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 72. இவர், கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் சொரக்காய்பேட்டையில் கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, கட்டுமான சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.