/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் கதவு உடைத்து 40 சவரன் கொள்ளை
/
வீட்டின் கதவு உடைத்து 40 சவரன் கொள்ளை
ADDED : மே 05, 2024 11:02 PM
செங்கல்பட்டு,: செங்கல்பட்டு அடுத்த, ஜே.சி.கே., நகர், தென்றல் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 79. செங்கல்பட்டில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு, வழக்கம் போல வீட்டின் கதவை பூட்டி வீட்டு, தன் படுக்கை அறையில் உறங்கச் சென்றார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், துணிகளுக்கு இடையே இருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவை திறந்து, அதில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் குத்து விளக்குகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
விடியற்காலை எழுந்து பார்த்த ரங்கநாதன், பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.