/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது
/
எரும்புதின்னி கடத்தியவர்கள் பள்ளிப்பட்டில் கைது
ADDED : ஆக 31, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து எரும்பு தின்னியை சிலர் பள்ளிப்பட்டு பகுதிக்கு கடத்தி வருவதாக, பள்ளிப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனசரகர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாருதி பிரஸ்சா கார் அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் எரும்பு தின்னி இருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தலில் ஈடுபட்ட திருப்பதி மற்றும் சித்துார் பகுதியை சேர்ந்த நுாருல்லா, சபி, முருகன், ஹரீஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.