/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனைவிக்கு 2ம் திருமணம் ஏற்பாடு சகலை மீது குண்டு வீசியவர் கைது
/
மனைவிக்கு 2ம் திருமணம் ஏற்பாடு சகலை மீது குண்டு வீசியவர் கைது
மனைவிக்கு 2ம் திருமணம் ஏற்பாடு சகலை மீது குண்டு வீசியவர் கைது
மனைவிக்கு 2ம் திருமணம் ஏற்பாடு சகலை மீது குண்டு வீசியவர் கைது
ADDED : மே 03, 2024 08:52 PM
நுங்கம்பாக்கம்:கே.கே.நகர், ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 32. இவரது மனைவியின் தங்கை சிந்து.
சிந்துவிற்கும், அவரது கணவரான ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது உசேன் பாஷா, 28, என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், பாலசுப்ரமணியன் அவரது மைத்துனி சிந்துவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார். இதனால், ஆத்திரமடைந்த முகமது உசேன் பாஷா, பாலசுப்ரமணியனை கொலை செய்வதற்கு முடிவு செய்து வலம் வந்துள்ளார்.
இதற்காக, கூட்டாளிகளான தேனாம்பேட்டை, பெரியார் சாலையைச் சேர்ந்த சதீஷ்குமார், 28, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வேல்முருகன், 27, ஆகியோருடன் திட்டமிட்டார்.
நேற்று முன்தினம், நுங்கம்பாக்கம், காம்தார் நகர் வழியாக பாலசுப்ரமணியன் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது உசேன் பாஷா, சதீஷ்குமார், வேல்முருகன் ஆகியோர், பாலசுப்ரமணியனிடம் வீண் தகராறு செய்தனர்.
பின் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீச முயற்சித்தனர். தகவல் கிடைத்து நுங்கம்பாக்கம் போலீசார் அங்கு வந்ததும் தப்பினர்.
போலீசார் பாலசுப்ரமணியனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து, முகமது உசேன்பாஷா உட்பட மூவரையும் கைது செய்து, கத்தி மற்றும் நாட்டுவெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.