/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு மழைக்கே குளமாகி போன அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
/
சிறு மழைக்கே குளமாகி போன அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
சிறு மழைக்கே குளமாகி போன அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
சிறு மழைக்கே குளமாகி போன அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை
ADDED : ஆக 13, 2024 07:07 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, திருத்தணியில் 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கோடைக்கு பின், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
பகலில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலை நேரத்தில் தட்பவெப்பம் மாறி, அவ்வப்போது மாவட்டம் முழுதும் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 10.4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலையை 2014ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு, 2018-ம் ஆண்டின் இறுதியில் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இதில், திருமழிசை பகுதியிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் வரை உள்ள நெடுஞ்சாலையில் சிறு மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளது.
இணைப்புச் சாலை பணிகளும் பல பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சேதமடைந்த சாலை சிறு மழைக்கே குளம்போல் மாறியுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் சிறு மழையில், பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் பகுதியில் அதிவிரைவு நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.