/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிசைக்கு தீ வைத்தவர் சிக்கினார்
/
குடிசைக்கு தீ வைத்தவர் சிக்கினார்
ADDED : மார் 02, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மாமல்லபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன், 62. கடந்த 28ம் தேதி இரவு, இவரது குடிசையில், தாய் மாணிக்கம்மாளுடன் துாங்கினார்.
நள்ளிரவில் குடிசை தீப்பற்றி எரிந்ததை கண்டு, இரண்டு பேரும் வெளியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த காதர், 26, என்பவர், குடிசைக்கு தீ வைத்தது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் காதரை விசாரித்தனர். குடிசைக்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் காதரை கைது செய்தனர்.