/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி தாசில்தாராக விருப்பம்
/
தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி தாசில்தாராக விருப்பம்
தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி தாசில்தாராக விருப்பம்
தந்தை இறந்த நாளில் தேர்வு எழுதிய மாணவி தாசில்தாராக விருப்பம்
ADDED : மே 11, 2024 01:20 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 45. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தாமரைச்செல்வி, 43, தம்பதிக்கு மோனிஷா, சோனியா ஆகிய, 2 மகள்களும், கர்ணா என்ற ஒரு மகனும் உள்ளனர்.
மோனிஷா அதே கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில், 10ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த அரசு பொதுத்தேர்வில், கணிதப்பாட தேர்வின் போது, காலையில் மோனிஷாவின் தந்தை முனுசாமி இறந்தார். இந்நிலையிலும் மோனிஷா கணிதத்தேர்வு எழுதினர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மோனிஷா 500க்கு 332 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
மோனிஷா கூறியதாவது:
தந்தையின் உடல்நிலை பாதிப்பால், என்னால் தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை. கணிதத் தேர்வின் போது, என் தந்தை இறந்த நிலையிலும் மனவேதனையுடன் தேர்வு எழுதினேன். ஆகையால், என்னால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.
வரும் பிளஸ் 2 தேர்வில் நன்றாக படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று சாதிப்பேன். என் தந்தை உயிருடன் இருக்கும்போது, என்னிடம், நீ நன்றாக படித்து தாசில்தாராக பணியாற்ற வேண்டும் என, ஆசைப்பட்டார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், தாசில்தாராக பணிபுரிந்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு கூறினார்.