
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் துரை மகன் சதீஷ், 27. சுகாதாரத்துறையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவரது சகோதரி ராஜேஸ்வரி என்பவருக்கும் உடன் பணிபுரியும் லெட்சுமி என்பவருக்குமிடையே பிரச்சனை உள்ளது. சதீஷ் லெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் வந்த லெட்சுமியின் மகன்களான சூர்யா, தினேஷ் ஆகிய இருவரும் சதீஷிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தினர். இதில் சதிஷ் பலியானார். தடுக்க வந்த சதீஷ் நண்பர் முரளி என்பவர் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து சதிஷ் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் தெரிவித்துள்ளார்.