/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்
/
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்
ADDED : மே 09, 2024 01:28 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சக்கரமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் 41; கட்டட தொழிலாளி. இவர், கடந்த மாதம் 29ம் தேதி வேலைக்காக சென்னைக்கு சென்றார்.
வீட்டில் மனைவி மற்றும் மகள் இருந்த நிலையில், மதியம் 1:30 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாக, 'ஹூரோ ஹோண்டா பேஷன்' இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
மேலும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வீட்டு வாசலில் அமர்ந்து விட்டு செல்வதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், துளசிராமனின் மனைவி மற்றும் மகள்கள் கால்நடைகளுக்கு உணவளிக்க வீட்டின் பின்புறம் சென்றுள்ளனர்.
இதை பயன்படுத்தி பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் 4,000 ரூபாயை திருடி சென்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீசார், அப்பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, நேற்று காலை பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 28, கன்னடப்பாளையம் வினிதா, 29, தக்கோலம் ஆனந்தன், 46, முருகன், 52, உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 சவரன் நகை மற்றும் இரண்டு பைக்கை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.